பணவீக்கம் அதிகரிப்பின் எதிரொலி; ஈரானில் வெடித்த போராட்டம் வன்முறையாக மாறியதில் 03 பேர் பலி..!
Three people have been killed as protests that erupted in Iran due to rising inflation turned violent
தென் மேற்கு ஈரானில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் அதனை கண்டித்து நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளது. இதில், 03 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேற்காசிய நாடான ஈரானில், 1979-இல் ஏற்படுத்தப்பட்ட இஸ்லாமியக் குடியரசின் அரசியலமைப்பு சட்டப்படி ஆட்சி நடந்து வருகிறது. அந்நாட்டில் பணவீக்கத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் கரன்சியான ரியாலின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்தது. இதனால், மூன்று ஆண்டுக்குப் பின், அங்கு மீண்டும் பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

ஆரம்பத்தில் பொருளாதாரக் கோரிக்கைகளுடன் தொடங்கிய குறித்த போராட்டம், பின்னர் அரசுக்கு எதிரான முழக்கங்களாக மாறியுள்ளன. முதலில் டெஹ்ரான் மையப் பகுதியில் தொடங்கிய போராட்டங்கள், இஸ்பஹான், ஷிராஸ், மஷ்ஹத் உள்ளிட்ட பிற நகரங்களுக்கும் பரவியுள்ளது. போராட்டக் காரர்களை கலைக்க பாதுகாப்புப் படையினர், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.
இந்த சூழலில், பல இடங்களில் போராட்டக் காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்ட நிலையில், போராட்டங்கள் வன்முறையாக மாறியதில் 03 பேர் கொல்லப்பட்டனர். டெஹ்ரானில் இருந்து தெற்கே 650 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரத்தில் மோதல்கள், கல்வீச்சு காரணமாக பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்ட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
English Summary
Three people have been killed as protests that erupted in Iran due to rising inflation turned violent