12 வயதில் விழுங்கிய தெர்மோமீட்டர்...! 20 ஆண்டுகள் கழித்து கண்டுபிடிப்பு...! - மருத்துவர்களையே வியக்க வைத்த அதிசயம் - Seithipunal
Seithipunal


நாம் தெரியாமல் விழுங்கிய பொருள் உடலில் ஜீரணமாகி மறைந்து விடும் என்ற பொதுவான நம்பிக்கையை சிதைக்கும்படி, சீனாவில் நிகழ்ந்த அபூர்வ சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவரின் வயிற்றுக்குள் 20 ஆண்டுகள் முழுவதும் ஒரு தெர்மோமீட்டர் பாதிப்பின்றி இருந்தது மருத்துவ உலகையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது.


ஜெஜியாங் மாகாணத்தின் வென்சோ நகரைச் சேர்ந்த 32 வயதான வாங், கடுமையான வயிற்றுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எக்ஸ்ரே பரிசோதனையில், சிறுகுடல் பகுதியில் நீண்ட கூர்மையான பொருள் இருப்பது கண்டறியப்பட்டு, அது பாதரச தெர்மோமீட்டர் என உறுதி செய்யப்பட்டது.

குடல் சுவரை அழுத்திய நிலையில் இருந்ததால், எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படும் சூழல் இருந்ததாக தெரவிக்கப்படுகிறது.இந்த விசாரணையில், 12 வயதில் தவறுதலாக அதை விழுங்கியதும், பயத்தில் யாரிடமும் சொல்லாமல் மறந்துவிட்டதும் அவர் தெரிவித்ததாக தெரவிக்கப்படுகிறது.

பின்னர், மிக நுணுக்கமான அறுவை சிகிச்சை மூலம் வெறும் 20 நிமிடங்களில் தெர்மோமீட்டர் பாதுகாப்பாக அகற்றப்பட்டது.
20 ஆண்டுகளுக்குப் பிறகும் அது உடையாமல் இருந்தது மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

அது உடைந்திருந்தால் பாதரசம் பரவி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்றும், “அவர் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி” என மருத்துவர்கள் தெரவிக்கின்றனர்.

மேலும், நிபுணர்கள் எச்சரிப்பின் படி, தெரியாமல் பொருள் விழுங்கப்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என தெரவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thermometer swallowed at age 12 Found 20 years later miracle that amazed doctors


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->