ஹார்முஸ் நீரிணை மற்றும் ஓமன் வளைகுடா பகுதிகளில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தத்தளிக்கும் அமெரிக்க ராணுவம்..!
The US military is struggling without food and essential supplies in the regions of the Strait of Hormuz and the Gulf of Oman
ஈரான் மீதான ராணுவ முற்றுகையை வலுப்படுத்துவதற்காக ஹார்முஸ் நீரிணை மற்றும் ஓமன் வளைகுடா பகுதிகளில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க கடற்படை வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். அனால் இவர்களுக்கு போதிய உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கக் கடற்படை மற்றும் விமானப் படைக்குத் தேவையான தளவாடங்கள் மற்றும் Military Mail தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதே இந்த நெருக்கடிக்கு காரணம் என கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவின் பேரில் கடந்த திங்கள்கிழமை முதல் ஈரான் மீதான முழுமையான கடல்வழி முற்றுகை அமலுக்கு வந்துள்ளது. இந்த நடவடிக்கையில் 12-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஈடுபட்டுள்ளன. அதில் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன், யுஎஸ்எஸ் திரிபோலி போர்க்கப்பல்கள் முக்கியமானவை. ஆனால் இக்கப்பல்களில் இருக்கும் ராணுவத்தினர் மற்றும் கடற்படையினருக்கு இப்போது உணவுப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பொதுவாக இத்தகைய நீண்ட கால ராணுவ நடவடிக்கைகளின் போது, வீரர்களுக்கான உணவுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விமானங்களின் மூலமே விநியோகிக்கப்படும். ஆனால், தற்போது நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக Mail சேவை போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால், கப்பல்களில் இருப்பில் வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் வேகமாகத் தீர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
English Summary
The US military is struggling without food and essential supplies in the regions of the Strait of Hormuz and the Gulf of Oman