உலகில் உயிர் வாழ மிகவும் தகுதியான 'டாப் 10' நகரங்கள்..!
The Top 10 cities for the worlds most liveable
உலகில் உயிர் வாழ மிகவும் தகுதியான நகரங்கள் பட்டியலை எகனாமிஸ்ட் இதழின் இன்டலிஜென்ஸ் யூனிட் (EIU) வெளியிட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த வியன்னாவை பின்னுக்குத் தள்ளி, டென்மார்க்கின் தலைநகரான கோபன்ஹேகன் முதலிடத்தை பிடித்துள்ளது.
நடப்பு 2025-ஆம் ஆண்டில் உலகில் உயிர் வாழ மிகவும் தகுதியான நகரங்கள் பட்டியலை உலக அளவில் 173 நகரங்களில் ஆய்வு நடத்தி, குறித்த தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 05-வது இடத்திலிருந்து கால்கரி இந்த ஆண்டு 18-வது இடத்திற்கு சரிந்தது, அதே நேரத்தில் டொராண்டோ 12-வது இடத்திலிருந்து 16-வது இடத்திற்கு பின் தங்கியுள்ளது.
உலகில் உயிர் வாழ மிகவும் தகுதியான 'டாப் 10' நகரங்கள்
01- கோபன்ஹேகன், டென்மார்க்
02- வியன்னா, ஆஸ்திரியா
03- சூரிச், சுவிட்சர்லாந்து
04- மெல்போர்ன், ஆஸ்திரேலியா
05- ஜெனீவா, சுவிட்சர்லாந்து
06- சிட்னி, ஆஸ்திரேலியா
07- ஒசாகா, ஜப்பான்
08- ஆக்லாந்து, நியூசிலாந்து
09- அடிலெய்டு, ஆஸ்திரேலியா
10- வான்கூவர், கனடா

கடைசி வரிசையில் இடம் பெற்றுள்ள நகரங்கள்
வங்கதேச தலைநகர் டாக்கா கடைசியில் இருந்து 03-வது இடத்தையும், பாகிஸ்தானின் கராச்சி மற்றும் அல்ஜீரியாவின் அல்ஜியர்ஸ் ஆகியவை நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தையும் பிடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
The Top 10 cities for the worlds most liveable