டைம்ஸ் உயர்கல்வி தரவரிசை பட்டியல்: இந்திய கல்வி நிறுவனங்கள் பின்னடைவு..? முதல் 50 இடங்களில் இரண்டே இரண்டு கல்வி நிறுவனம்..! - Seithipunal
Seithipunal


ஐ.நா.,வின் நிலையான வளர்ச்சி இலக்குகளை (எஸ்டிஜிஎஸ்) நோக்கி பணியாற்றும் 130 நாடுகளைச் சேர்ந்த 2,526 பல்கலைகழகங்கள் குறித்து பிரிட்டனைச் சேர்ந்த டைம்ஸ் இதழ் ஆய்வு நடத்தியது. 

இந்த உயர்கல்வி தரவரிசைப்பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் இந்தியாவைச் சேர்ந்த 02 கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன. பருவநிலை மாற்றம், தரமான கல்வி, பாலின சமத்துவம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு குறித்த தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தப் பட்டியலில் இந்திய கல்வி நிறுவனங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முதல் 50 இடங்களுக்குள் 02 மட்டுமே இந்திய கல்வி நிறுவனங்கள் பெற்றுள்ளன.

அத்துடன், முதல் 100 இடங்களுக்குள்ளும் 04 இந்திய கல்வி நிறுவனங்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளன. இதில் கோவையில் உள்ள அமிர்த விஸ்வ வித்யபீதம் நிகர்நிலை பல்கலை 41-வது இடத்தையும், பஞ்சாபில் உள்ள லவ்லி பல்கலை 48-வது இடத்தையும் பிடித்துள்ளன. 

அடுத்ததாக, மைசூருவில் உள்ள ஜேஎஸ்எஸ் உயர்கல்விக்கான நிறுவனம் 56-வது இடமும், ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள ஷூலின் பல்கலையும் 96-வது இடத்தையும் பிடித்துள்ளன.

தரவரிசை பட்டியலுக்காக தேர்வான 10 இந்தியக் கல்வி நிறுவனங்கள்..

01. அமிர்தா விஸ்வா வித்யபீதம்( தமிழகம்)
02. லவ்லி புரோபஷனல் பல்கலை ( பஞ்சாப்)
03. கர்நாடகாவின் ஜேஎஸ்எஸ் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி முகமை ( கர்நாடகா)
04. ஷூலின் பல்கலை( ஹிமாச்சல பிரதேசம்)
05. அண்ணா பல்கலை( தமிழகம்)
06. பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசண்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்( தமிழகம்)
07. கேஐஐடி பல்கலை( ஒடிஷா)
08. மணிபால் உயர்கல்வி அகாடமி( கர்நாடகா)
09. என்ஐடிடிஇ (கர்நாடகா)
10. செஞ்சூரியன் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை பல்கலை( ஒடிஷா)
11. சித்காரா பல்கலை( பஞ்சாப்)
12. டாக்டர் டி.ஓய்.பாட்டில் வித்யாபீடம்( புனே)
13. காந்திநகர் ஐஐடி( குஜராத்)
14. மணிபால் பல்கலை(ராஜஸ்தான்)
15. சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் மையம்( தமிழகம்)
15. சிவ நாடார் பல்கலை( உ.பி.,) ஆகியன இடம்பிடித்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indian educational institutions ranked in Times Higher Education Rankings


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->