இங்கிலாந்தில் சமூக பரவலாக மாறியது ஒமைக்ரான் தொற்று பாதிப்பு...! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று சமூக பரவலாக மாறியுள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு சுகாதார துறை அமைச்சர் சஜித் ஜாவித், நாட்டின் பல்வேறு பிராந்தியங்களில், ஒமைக்ரான் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. சர்வதேச பயணம் மேற்கொண்டவர்களுடன் தொடர்பில் இல்லாதவர்களுக்கும் இந்த பாதிப்பு அதிக அளவில் கணடறியப்பட்டுள்ளது. எனவே இங்கிலாந்தின் பல பகுதிகளில் தற்போது சமூக பரவல் என்பதை நாம் முடிவு செய்யலாம் என்று தெரிவித்தார். 

உருமாறிய புதிய வகை கொரோனா தொற்றான ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. அந்த வைரஸ் இது வரை 45 -க்கும் அதிகமான நாடுகளில் பரவி உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The spread of the Omicron virus has increased in the UK


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->