'அமெரிக்கா வீசும் எலும்பு துண்டுக்காக குரைக்கும்'.. தென்கொரியா அதிபரை கடுமையாக விமர்சித்த கிம் ஜாங் சகோதரி.! - Seithipunal
Seithipunal


உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொண்டது. இதனால் கொரியா தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்தது.

இதையடுத்து கடந்த வாரம் வடகொரியா அமெரிக்காவைத் தாக்கும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை செய்தது. இதற்கு அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன. மேலும் வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளை கண்டிக்கும் விதமாக புதிய தடைகளை தென்கொரியா அறிவித்தது.

இந்நிலையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரியான கிம் யோ ஜாங் தென்கொரிய அதிபரை கடுமையாக விமர்சித்துள்ளார். இதில் அமெரிக்காவின் சொல்லைக் கேட்டு நடந்துவரும் தென்கொரிய அதிபர் ஒரு முட்டாள் என்றும், அமெரிக்கா வீசும் எலும்புத் துண்டுகளுக்காக அவர் குரைத்து வருவதாக என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும் வடகொரியா மீதான புதிய பொருளாதார தடைகள் குறித்த தென்கொரியாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய அவர் முட்டாள்கள் தொடர்ந்து அபாயமான சூழலை ஏற்படுத்தி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The sister of the North Korean leader who criticized the South Korean leader


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->