26 ஆண்டுகால விண்வெளி வரலாற்றில் முதன்முறை; திட்டமிட்ட நாளுக்கு முன் பூமிக்குத் திரும்பிய வீரர்கள்; காரணம் என்ன..?
The astronauts who returned to Earth before the scheduled date in the history of space exploration
உடல்நலக் குறைவு காரணமாக 04 விண்வெளி வீரர்கள், திட்டமிடப்பட்ட நாள்களுக்கு முன்னதாகவே பூமி வந்தடைந்துள்ளனர். இது, நாசா விண்வெளி வரலாற்றில் முதன்முறையாக நடந்த நிகழ்வாகும்.
நாசாவைச் சேர்ந்த மைக் பிங்கி, ஜெனா கார்ட்மேன், ஜப்பானை சேர்ந்த கிமியா யூயி, மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர் ஒலெக் பிளாட்னாவ் ஆகிய நால்வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி, ஆய்வுகள் மேற்கொண்டு வந்தனர். ஆறு மாதங்கள் தங்கி, ஆய்வுகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நால்வரில் ஒருவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, குறித்த நான்கு விண்வெளி வீரர்களையும், பூமிக்கு திரும்புமாறு நாசா உத்தரவிட்டுள்ளது. அதன்படி விண்கலத்தில் புறப்பட்ட நால்வரும் இன்று (ஜனவரி 15) காலை பத்திரமாக கலிபோர்னியா வந்தடைந்துள்ளனர்.
இருப்பினும் குறித்த நால்வரில், யாருக்கு உடல்நலக் குறைவு என்பதையும், எம்மாதிரியான பிரச்சினை என்பதையும் நாசா வெளியிடவில்லை. அத்துடன், சர்வதேச விண்வெளி நிலையத்தின் 26 ஆண்டுகால வரலாற்றில், மருத்துவ அவசரம் என்று கூறி, வீரர்கள் வெளியேற உத்தரவிட்டப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
The astronauts who returned to Earth before the scheduled date in the history of space exploration