'அங்கிள்' என அழைத்தது, ராணுவ தளபதியை விமர்சித்து பேசிய சர்ச்சை: நிரந்தரமாக பதவியில் இருந்து நீக்கப்பட்ட தாய்லாந்து இளம் பிரதமர்..! - Seithipunal
Seithipunal


தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டார். இன்று ( ஆகஸ்ட் 29) அவரை நிரந்தரமாக பதவியில் இருந்து நீக்கி அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கம்போடியுடனான எல்லைப் பிரச்சினை குறித்து ராணுவ தளபதியை விமர்சித்து  ஷினவத்ரா பேசிய ஆடியோ கசிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

கம்போடிய செனட் தை தலைவரான ஹன் சென்னிடம் ராணுவ தளபதியை விமர்சித்து பேசியதாக சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில் தாய்லாந்து பிரதமரை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் வலுத்த நிலையில் ஷினவத்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

தென் கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லையில் பதற்றம் ஏற்பட்ட நிலையில், அதனை தணிக்கும் வகையில், கம்போடிய முன்னாள் பிரதமரும், செனட் தலைவருமான ஹன் சென்னுடன், தாய்லாந்து பிரதமர் ஷினவத்ரா தொலைபேசியில் கலந்துரையாடினார். 

அப்போது, அவரை 'அங்கிள்' என அழைத்ததுடன், தாய்லாந்து ராணுவ தளபதியையும் விமர்சித்து பேசியிருந்தார். அத்துடன், எது வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள். அது குறித்து கவனம் செலுத்துகிறேன் எனவும் தெரிவித்தார்.

குறித்த தொலைபேசி உரையாடல் கசிந்த நிலையில்,அவருக்கு எதிராக போராட்டம் வெடித்தது.மேலும் அவர், பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனையடுத்து பேடோங்டார்ன் ஷினவத்ரா மன்னிப்பு கேட்டதுடன், பதற்றத்தை தணிப்பதற்காக அப்படி பேசியதாக குறிப்பிட்டு இருந்தார். 

இந்த விவகாரம் குறித்து விசாரித்த தாய்லாந்து அரசியலமைப்பு நீதிமன்றம், பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா நெறிமுறைகளை மீறியதாக குற்றம்சாட்டியதுடன், வழக்கு தொடர்ந்து விசாரணை செய்ய வேண்டி உள்ளதால், பிரதமர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், இன்று ( ஆகஸ்ட் 29) அவரை நிரந்தரமாக பதவியில் இருந்து நீக்கி அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தாய்லாந்தின் அரசியல் குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வந்த பேடோங்டார்ன் ஷினவத்ரா, கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் ஆனார்.  இதன் மூலம் அந்நாட்டில் இளம் வயதில் பிரதமர் ஆக பதவியேற்றவர் என்ற பெருமையும் பெற்றார். ஆனால், பதவியேற்று ஓராண்டு மட்டுமே உள்ளநிலையில், தொலைபேசி உரயைாடல் சசிவு விவகாரத்தில், அவரது பதவி பறிபோய் உள்ளமை அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thailand prime minister permanently removed from office over controversy over criticism of army chief


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->