தாய்லாந்தில் ஏற்பட்ட கொடூர விபத்து: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!
Thailand bus crashes 14 killing
தாய்லாந்த், பாங்காக்கில் இருந்து பேருந்து ஒன்று 49 பேருடன் பிரச்சாவ் கிரி கான் மாகாணத்திற்கு சென்றுக் கொண்டிருந்தபோது தேசிய பூங்கா அருகே பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக மரத்தில் மோதியது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 14 பேர் சம்பவ இடத்தில் பரிதாமாக உயிரிழந்து விட்டனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்த சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது, பேருந்து ஓட்டுனர் தூங்கியதே விபத்துக்கான காரணம் என தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் உயிர் பிழைத்த பேருந்து ஓட்டுனருக்கு ரத்த மாதிரி சோதனைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலும் தாய்லாந்து, பர்மா மற்றும் வீராபெட் போன்ற இடங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
English Summary
Thailand bus crashes 14 killing