பயங்கர சாலை விபத்து: எரிவாயு லாரி வெடிப்பால் அதிர்ந்த சாண்டியாகோ...! - தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டம்
Terrible road accident Santiago shaken by gas truck explosion Firefighters protest fiercely
சிலி நாட்டின் தலைநகரான சாண்டியாகோவில் உள்ள ரென்கா பகுதியில், திரவ எரிவாயு ஏற்றிச் சென்ற லாரி நெடுஞ்சாலையில் பயணம் செய்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தாறுமாறாகச் சென்று சாலையோரத்தில் கவிழ்ந்தது. அதனைத் தொடர்ந்து லாரி சக்திவாய்ந்த வெடிப்புடன் சிதறி, நெடுஞ்சாலை முழுவதும் தீப்பிழம்புகள் பரவின.

இந்த விபத்தின் தாக்கத்தில் அந்த பகுதி முழுவதும் அடர்ந்த புகை மூட்டமாக மாறி, சுற்றுவட்டாரத்தில் பதற்ற நிலை உருவானது. இந்த சம்பவத்தில் லாரி ஓட்டுநர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்; மேலும் 5 பேர் காயமடைந்து உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த வெடிப்பின் அதிர்வால் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்ததுடன், சில இடிபாடுகள் அருகிலிருந்த கட்டிடங்களின் மீது விழுந்தன.
இதுகுறித்த தகவல் கிடைத்தவுடன் விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் போக்குவரத்து பாதிப்பையும் ஏற்படுத்தியது.
English Summary
Terrible road accident Santiago shaken by gas truck explosion Firefighters protest fiercely