சோகம்.. தனியார் பேருந்து மோதி 10 பேர் பலி; 27 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத்தில் இருந்து சரக்கு வேன் ஒன்றில் தொழிலாளர்கள் சிலர், ரக் ஷா பந்தன் கொண்டாட்டத்திற்காக அலிகார் மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றனர். 

அதன் படி இந்த வேன் நேற்று காலை, மீரட் நெடுஞ்சாலையில் சலேம்பூர் பகுதியில் சென்றபோது எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; மேலும், 27 பேர் படுகாயமடைந்தனர். 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் இந்த சம்பவம் குறித்து பேசுகையில், ‘விபத்தில் காயமடைந்தவர்களில் ஒன்பது பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அவர்களில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் மேல் சிகிச்சைக்காக மீரட் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பலியானவர்களில் இருவரது உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை’ என்றுத் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ten peoples died and 27 peoples injured for accident in uttar pradesh


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->