இன்றுமுதல் தற்காலிக போர் நிறுத்தம்; ஒப்புதல் அளித்த இஸ்ரேல்!
Temporary ceasefire from today Israel has agreed
காசாவில் இன்றுமுதல் தற்காலிக போர் நிறுத்தம் செய்வதற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளது.இதனால் காசா மக்கள் சற்று நிம்மதியடைத்துள்ளனர்.
கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
இதையடுத்து, ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது.
2 ஆண்டுகள் நடைபெற்ற இந்த போரில் காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 67 ஆயிரத்து 194 பேர் உயிரிழந்துள்லனர்.
இதனிடையே, பணய கைதிகள் விடுதலை, இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சி மேற்கொண்டதன் பயனாக போரை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேல், ஹமாஸ் சம்மதம் தெரிவித்தன.
ஒப்பந்தப்படி காசா முனை மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும். இதையடுத்து, 72 மணிநேரத்தில் இஸ்ரேலிய பணய கைதிகள் அனைவரையும் ஹமாஸ் ஆயுதக்குழு விடுதலை செய்ய வேண்டும். இதற்கு ஈடாக இஸ்ரேலிய சிறைகளில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 2 ஆயிரத்து 250 பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்படுவர்.
இந்நிலையில், காசா முனையில் போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் மந்திரி சபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, காசாவில் போர் நிறுத்தம் இன்றுமுதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை ஏதேனும் ஒரு தரப்பு மீறினாலும் மீண்டும் போர் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Temporary ceasefire from today Israel has agreed