சிகாகோவில் சைக்கிளில் பயணம் செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து நேற்று சிக்காகோ சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சான்பிரான்சிஸ்கோவில் 1300 கோடி முதலீட்டில் 4,600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உலகின் முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனை அடுத்து சான்பிரான்சிஸ்கோவில் இருந்து முதல்வர் நேற்று சிகாகோ சென்றடைந்தார்‌. விமான நிலையத்தில் சிக்காகோ தமிழ் சங்கம்,  தமிழ்நாடு அறக்கட்டளை, வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு, அறம் குழு, மில்வாக்கி தமிழ்ச்சங்கம், பிளூமிங்டன் தமிழ் சங்கம், மேடிசன் தமிழ் சங்கம், பியோரியா தமிழ்ச் சங்கம் மற்றும் அன்னை தமிழ் பள்ளி ஆகிய தமிழ் சங்கங்களின் சார்பில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இந்நிலையில் சிகாகோவில் முதல்வர் ஸ்டாலின் சைக்கிளில் பாடியபடி சிகாகோ சாலையில் சென்ற வீடியோவை அவரது எக்ஸ் பக்கத்தில் அவர் பகிர்ந்து உள்ளார்.

அதில் சிகாகோ நகரின் முக்கிய சாலைகள் மற்றும் கடற்கரையில் சைக்கிள் ஓட்டியவாறு  மாலைப்பொழுதை ரசித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தற்போது அந்த வீடியோப்பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அந்தப் பதிவில் முதல்வர் ஸ்டாலின் "மாலைப்பொழுதின் அமைதி புதிய கனவுகள் களம் அமைக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu Chief Minister M. K. Stalin traveled on a bicycle in Chicago


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->