80 ஆயிரம் பேர் முன்னால் கொலையாளிக்கு தலிபான் தண்டனை...! - 13 வயது சிறுவனால் சுட்டு மரணத்தில் முடிவு...!
Taliban sentences murderer to death front 80000 people Shot death by 13year old boy
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி தொடரும் நிலையில், கடுமையான சட்ட அமலாக்கம் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது. கிழக்கு மாகாணமான கோஸ்ட் நகரில், கொலைகளை தொடர்ச்சியாக செய்த குற்றவாளி ஒருவருக்கு லட்சக்கணக்கான மக்களின் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

கடந்த 10 மாதங்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 சிறுவர்கள் உட்பட மொத்தம் 13 பேரை கொடூரமாகக் கொலை செய்த மங்கல் என்ற நபருக்கு, தலிபான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
அதன் பின்னர், ஆயிரக்கணக்கான மக்கள் திரளாக கூடிய மைதானத்தில் நேரடியாக தண்டனை நிறைவேற்றப்பட்டது.அதிலும் அதிர்ச்சி என்னவென்றால்,"கொல்லப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவனே, தலிபான்களின் அனுமதியுடன், குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனையை நிறைவேற்றினார்.
மரண தண்டனை நடைபெறும் நேரத்தில் செல்போன், கேமரா பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தாலும், பலர் மறைமுகமாக வீடியோ எடுத்தனர். அந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, உலகளவில் விவாதத்தை கிளப்பி வருகின்றன.
2021ல் தலிபான் ஆட்சி பிடித்த பிறகு, பொதுமக்கள் முன்னிலையில் நடைபெறும் இது 11வது மரண தண்டனை என்பதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
Taliban sentences murderer to death front 80000 people Shot death by 13year old boy