விமர்சனம் எத்தனை வந்தாலும் திமுக வெற்றி நடைதான்...! - விஜய்க்கு அமைச்சர் சவால் - Seithipunal
Seithipunal


திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு இன்று திருச்சியில் மரியாதை ஊர்வலம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அண்ணா சிலைக்கு மலரஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது,"இன்று மௌன ஊர்வலமாக வந்து அண்ணாவுக்கு மரியாதை செலுத்தியுள்ளோம். 2026-ஆம் ஆண்டு மீண்டும் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி தொடர வேண்டும், தமிழ்நாடு வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களது உறுதிமொழி. கலைஞரின் ஐம்பெரும் முழக்கங்களையும் இங்கே எழுப்பி உற்சாகம் ஏற்படுத்தியுள்ளோம்.

முதல்வர் கூறியது போல, கருத்துக்கணிப்புகளை தாண்டியும் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. மக்களுக்காக தொடர்ந்து உழைத்து வருகிறோம். மக்களின் நம்பிக்கையே எங்களது பலம்.

விஜய் கூறிய விமர்சனங்கள் குறித்து கேட்டபோது, அது அவர்களின் கட்சி ஆண்டு விழாவில் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கூறிய கருத்து தான். எங்களைப் பொறுத்தவரை, முதலமைச்சர் பதவி ஏற்றதிலிருந்து பல விமர்சனங்கள் வந்தாலும், தொடர்ந்து வெற்றி பெறுவது மக்களின் மனங்களை வென்றதால்தான்.

அந்த நம்பிக்கையை காப்பாற்றும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம்.மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் நிதி பங்கு 41 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும். குறைந்தபட்சம் 16-வது நிதிக்குழுவில் மாற்றம் வரும் என எதிர்பார்த்தோம். ஆனால் இந்த பட்ஜெட்டிலும் அதே 41 சதவீதமே தொடர்வது கவலைக்குரியது.

அதிலும் தமிழ்நாட்டுக்கு வெறும் 4.097 சதவீதம் மட்டுமே கிடைப்பதால், திட்டங்களை செயல்படுத்துவது சவாலாகிறது.மெட்ரோ ரெயில் உள்ளிட்ட முக்கிய திட்டங்களுக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.

பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய ரூ.3,548 கோடி குறித்தும் பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை. ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கான ரூ.3,112 கோடியும் வழங்கப்படாமல் உள்ளது.

திருச்சியைச் சேர்ந்த அமைச்சர்களின் துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.விவசாயிகள் முதல் சாதாரண மக்கள் வரை அனைத்துத் தரப்பினரையும் உதவும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது,” என அமைச்சர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Despite any criticism DMK path victory Minister challenges Vijay


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->