பனாமாவில் 6.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்...! - Seithipunal
Seithipunal


மத்திய அமெரிக்க நாடான பனாமாவின் புவேர்ட்டோ ஒபால்டியாவில் 6.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கமாமது 10 கிலோமீட்டர் ஆழத்தில், போர்டோ ஒபால்டியாவிலிருந்து வடகிழக்கே 41 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து அடுத்த 9 நிமிடங்களில் மீண்டும் அதேபகுதியில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இந்த அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் நிலநடுக்கத்திற்குப் பிறகு சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Strong magnitude 6 point 6 earthquake strikes in panama


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->