சி.எஸ்.கே, அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் நியமனம்; வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு..!
Zaheer Khan appointed as head coach of the CSK team
ஐபிஎல் தொடரின் தொடக்க ஆண்டான 2008-இல் ஒரு வீரராக சென்னை அணியில் இணைந்த பிளெமிங், அடுத்த ஆண்டான 2009 முதல் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார்.
கடந்த 17 ஆண்டுகால ஸ்டீபன் பிளெமிங்கின், பயிற்சியின் கீழ், சிஎஸ்கே அணி 05 முறை ஐபிஎல் கோப்பைகளையும், 02 முறை சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்று சாதனை படைத்துள்ளது. அத்துடன் 10 தடவைகைகள் இறுதிப்போட்டிக்கும், 12 தடவைகள் பிளே ஆப் சுற்றுக்கும் தகுதிப் பெற்றுள்ளது.
ஆனாலும், கடந்த 03 ஆண்டுகளாக சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்குக்கு கூட முன்னேறாமால் தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது. இதன் காரணத்தால் பயிற்சியாளர் பதவியில் இருந்து கடந்த ஜூலை மாதம் ஸ்டீபன் பிளெமிங் விலகினார்.

இதனையடுத்து, புதிய தலைமைப் பயிற்சியாளரை நியமிக்கும் பணியில் தீவிரமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இறங்கியது. இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கனை தலைமைப் பயிற்சியாளராக்க அணி நிர்வாகம் விரும்பிய நிலையில், சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் குழுவை இந்தியர்களை மையமாகக் கொண்டு அமைக்க வேண்டும் என தோனி விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் தொடர்பாக சிஎஸ்கே உரிமையாளர் ரூபா குருநாத் கூறியதாவது;
''ஜாகீர் கானின் சிறப்பான விளையாட்டு அனுபவம் மற்றும் இளம் வீரர்களை வளர்க்கும் திறன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முக்கியமான பலமாக இருக்கும். அவரது வழிகாட்டுதல் அணியின் அடிப்படை கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும்.'' என தெரிவித்துள்ளார்.

அடுத்து, சிஎஸ்கே நிர்வாக இயக்குநர் காசி விஸ்வநாதன் அவர்கள், ''ஜாகீர் கான் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர், குறிப்பாக இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பல ஆண்டுகளாக சிறந்த வழிகாட்டியாக இருந்து வருகிறா. அவரை வரவேற்பதில் ஆவலாக உள்ளோம்'' என்று குறிப்பிட்டுள்ளார். இரு தரப்புக்கும் இடையே நடந்த சுமுகமான மற்றும் நேர்மையான ஆலோசனைகளுக்குப் பிறகு, இந்த பரஸ்பர முடிவு எட்டப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நியமனம் குறித்துப் ஜாகீர்கான் பேசியுள்ளதாவது;
''ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சிஎஸ்கே அணியில் இணைவது பெருமையாக உள்ளது. ஒரு வீரராக சென்னை அணிக்கு எதிராக விளையாடிய போட்டிகளை நான் வெகுவாக ரசித்தேன். சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் உருவாக்கும் சூழல் மிகவும் சிறப்பாக இருக்கும். சென்னை அணியுடன் இணைந்து பணியாற்ற ஆவலோடு உள்ளேன்.'' எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Zaheer Khan appointed as head coach of the CSK team