நியூயார்க் நகரில் ரஷ்யா அதிபர் புடினை கிண்டலடிக்கும் விதமாக சிலை.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் தீவிரமடையும் போரில் ரஷ்யாவின் மும்முனை தாக்குதலால் உக்ரைனின் கிழக்கு மாகாணத்தின் முக்கியமான நகரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனை கண்டித்து ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

மேலும் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன.

இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் ரஷ்யா அதிபர் புடின் பீரங்கியில் சவாரி செய்வது போல் சிவப்பு நிறத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது.

ரஷ்ய அதிபரை கிண்டலடிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலை உலக நாடுகளிடையே பல்வேறு விமர்சனங்களை பெற்றுள்ளது.

இருப்பினும் சிலை மீது குழந்தைகள் பொம்மை துப்பாக்கியால் தண்ணீரை அடித்து பொழுது போக்கினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Statue mocks Russian President Putin in New York City


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->