குடும்பத்துடன் துபாய் சென்ற இலங்கையின் முன்னாள் அதிபர்.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் இலங்கை மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. அதனால், அந்நாட்டின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டம் வலுப்பெற்று வன்முறையாக மாறியதால் அதிபர் கோத்தபய தனது சொந்த நாட்டைவிட்டு தப்பிச் சென்றதுடன் பதவி விலகலும் நடைபெற்றது. 

தனது சொந்த நாட்டை விட்டுச் சென்ற அவர் மாலத்தீவு, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் தஞ்சமடைந்தார். அதன் பின்னர் அவர், மக்களின் போராட்டம் ஓய்ந்தபிறகு தான் நாடு திரும்பினார். 

தாய்லாந்து அரசு அவருக்கு நீண்டகாலம் தங்குவதற்கு அடைக்கலம் தந்தாலும் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்று தடை விதித்ததுடன், பாதுகாப்புக்கு காவலர்களையும் நியமித்திருந்தது. 

இதைத்தொடர்ந்து அவர் கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் இலங்கை திரும்பினார். அங்கு அவருக்கு முன்னாள் அதிபருக்கான சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நேற்று அவர் தனது குடும்பத்தினருடன் துபாய்க்கு புறப்பட்டு சென்றார். ஆனால், அங்கு அவர் எவ்வளவு காலம் தங்குவார் என்பது குறித்த எந்த அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை. மேலும், அவர் நாடு திரும்பியவுடன் முதல்முறையாக செல்லும் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

srilangan ex president goatabaya rajapaksa going to dubai


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->