₹40,000 கோடி வங்கி மோசடி: அமலாக்கத் துறை வளையத்தில் அனில் அம்பானி!
ADAG Chairman Anil Ambani Questioned 3716 Cr Mumbai Bungalow Attached
வங்கிக் கடன் மோசடி தொடர்பான பணப் பரிமாற்ற வழக்கில், ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி (66) இரண்டாவது முறையாக தில்லியில் உள்ள அமலாக்கத் துறை (ED) அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) நேரில் ஆஜரானார்.
விசாரணையின் பின்னணி:
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பல்வேறு வங்கிகளில் சுமார் ₹40,000 கோடி அளவிற்கு மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாகப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. முன்னதாக, கடந்த 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இவரிடம் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விசாரணையின் ஒரு பகுதியாக அமலாக்கத் துறை எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைகள்: மும்பையின் மிக விலையுயர்ந்த பகுதியில் உள்ள அனில் அம்பானியின் ₹3,716.83 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட இல்லம் கடந்த புதன்கிழமை முடக்கப்பட்டது.
இந்த வங்கி மோசடி வழக்கில் இதுவரை மட்டும் இவருக்குச் சொந்தமான சுமார் ₹15,700 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
உச்ச நீதிமன்ற கண்காணிப்பு:
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT), அனில் திருபாய் அம்பானி குழுமத்திற்கு (ADAG) எதிரான மூன்று முக்கியப் பண மோசடி வழக்குகளைத் தீவிரமாக விசாரித்து வருகிறது.
ஒரு காலத்தில் உலகப் பணக்காரர் வரிசையில் முன்னிலை வகித்த தொழிலதிபர், இன்று தனது பிரம்மாண்ட பங்களாவையும் பறி கொடுத்துவிட்டு விசாரணை அமைப்புகளின் முன் நிற்பது கார்ப்பரேட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
ADAG Chairman Anil Ambani Questioned 3716 Cr Mumbai Bungalow Attached