மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு - ஸ்பெயின் பாராளுமன்றம் ஒப்புதல்.! - Seithipunal
Seithipunal


ஸ்பெயினில் வேலைக்கு செல்லும் பெண்கள் மாதவிடாய் நாட்களில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுத்துக்கொள்வதற்கு வழிவகை செய்யும் மசோதாவிற்கு இன்று பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. 

இந்த மசோதா மாதவிடாய் காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உள்ளடக்கி உள்ளது. வாக்கெடுப்புக்கு பின் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு 185 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 154 பேர் எதிராகவும் வாக்களித்தனர். மேலும், 3 பேர் வாக்களிக்கவில்லை. 

இது பிரதமர் பெட்ரோ சான்செஸின் சோசலிச அரசாங்கத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. இதுவரைக்கும் இதுபோன்ற ஒரு சிறப்புடைய  முடிவை எந்த ஐரோப்பிய நாடுகளும் எடுத்ததில்லை. 

இந்த பெருமையை பெற்ற ஒரே நாடு ஸ்பெயின் மட்டுமே. இதேபோல்,ஸ்பெயின் பாராளுமன்றம் எல்.ஜி.பி.டி.க்யூ. சமூகத்தின் உரிமைகளுக்கான பாதுகாப்பை வலுப்படுத்தும் மற்றொரு சட்டத்திற்கும் ஒப்புதல் அளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

spain country paid woman holiday with salry in menstrual time


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->