விவாகரத்து இழப்பீட்டு தொகையாக ரூ.6,200 கோடியா..? தொழிலதிபருக்கு தென் கொரியா நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! - Seithipunal
Seithipunal


தென் கொரியா முன்னாள் அதிபரின் மகளுக்கு விவாகரத்து இழப்பீட்டு தொகையாக ரூ.6,200 கோடி வழங்க தொழிலதிபருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அந்நாட்டின் 02-வது மிகப்பெரிய நிறுவனமான 'எஸ்கே குரூப்' அதிபர் சே டே-வோன், தனது முன்னாள் மனைவிக்கு விவாகரத்து இழப்பீடாக ரூ.6,200 கோடி வழங்க வேண்டும் என்று சியோல் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

தென் கோரிய முன்னாள் அதிபர் மகள் ரோ சோ இயோங்குக்கும் எஸ்கே குரூப் அதிபர் சே டேவோனுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இடையில் குடும்பத்தகராறு காரணமாக பிரிந்துள்ளனர். 

இந்நிலையில், விவாகரத்து கோரி சியோல் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், விவாகரத்து இழப்பீட்டுத் தொகையாக ரூ.6,200 கோடியை ((944 பில்லியன் கொரிய வான்) ரோ சோ இயோங்குக்கு வழங்க தொழிலதிபருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென் கொரிய நாட்டின் விவாகரத்து வரலாற்றிலேயே இதுவே விவாகரத்து வரலாற்றிலேயே இதுவே மிக அதிகப்படியான இழப்பீட்டு தொகை என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

South Korean court orders businessman to pay Rs 6200 crore as divorce compensation


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->