காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2026; மாற்றுத்திறனாளிகளுக்கான பளுதூக்குதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள ஜண்டு குமார்..! - Seithipunal
Seithipunal


காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2026, ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி நேற்று இரவு நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் ஜண்டு குமார் தனது இரண்டாவது முயற்சியில் 190 கிலோ என்ற மிகப்பெரிய எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 

இதன் மூலம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2026-இல் முதல் பதக்கத்தை வென்று இந்தியா தனது கணக்கை தொடங்கியுள்ளது.

முன்னதாக, குத்துச்சண்டையில் ஆடவர் 55 கிலோ பிரிவில் ஜடுமணி சிங் 16-வது சுற்றுக்கு முன்னேறினார், அதே நேரத்தில் லான் பவுல்ஸில் இந்தியா இரண்டு வெற்றிகளைப் பதிவு செய்தது. இதில் நீச்சல் வீரர் ஸ்ரீஹரி நடராஜ் ஆடவர் 50 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார், ஆனால், அதற்கு மேல் அவரால் முன்னேற முடியவில்லை. அடுத்ததாக, ஆடவர் S13 100 மீட்டர் பாரா-நீச்சல் இறுதிப் போட்டியில், கே. புடிகினா 04-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜூடோ வீராங்கனை துலிகா மான், கடந்த 12 மாதங்களில் மூன்று முறை தனது இருப்பிடத்தைக் குறிப்பிடத் தவறியதற்காக தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையால் (NADA) தற்காலிகத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் தொடரில் இருந்து விலக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jandu Kumar wins bronze medal in weightlifting for the disabled at the Commonwealth Games 2026


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->