ஷேக் ஹசீனாவுடன் தொடர்பு..? புதிய அரசு அதிருப்தி; வங்கதேச அதிபர் திடீர் ராஜினாமா..!
Bangladesh President resigns suddenly due to disagreement with new government
வங்கதேசத்தில் கடந்த 03 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த மாணவர் புரட்சி காரணமாக அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அதன்பின்னர் அந்நாட்டின் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதயேற்றாது. அந்த பின்னர் கடந்த பிப்ரவரியில் நடந்த தேர்தலில் தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராக பதவி ஏற்றார்.
ஆனாலும்,பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அதிபர் முகமது ஷஹாபுதின் மட்டும் பதவியில் நீடித்து வந்தார். 2023-இல் அதிபர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட அவருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது. ஆனால், அவருக்கு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் தொடர்புகள் இருந்ததாக கூறப்படும் கருத்துக்கள் காரணமாக தற்போதைய தாரிக் ரஹ்மான் அரசுக்கும், அதிபர் முகமது ஷஹாபுதீனுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் ஷேக் ஹசீனா மீண்டும் வங்கதேசம் திரும்ப உள்ளதாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன் ஹசீனாவுடன் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. இது வங்கதேச புதிய அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் நேற்று திடீரென அதிபர் பதவியில் இருந்து முகமது ஷஹாபுதீன் ராஜினாமா செய்துள்ளார்.
English Summary
Bangladesh President resigns suddenly due to disagreement with new government