தென் கொரியா உச்சி மாநாடு! அடுத்த மாதம் டிரம்ப்,ஜின்பிங் நேருக்கு நேர் சந்திப்பு நிகழுமா...?
South Korea summit Trump and Jinping meet face to face next month
அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா மற்றும் சீனாவுக்கு வரிகள் விதித்ததையடுத்து, அமெரிக்கா–இந்தியா–சீனா உறவுகள் பதற்றமாக இருந்தன.அதேசமயம் சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில், பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் ஆகியோர் சந்தித்து பேசினர்.

பின்னர், சீனா மற்றும் ரஷியாவுடன் வர்த்தகத்தை அதிகரிக்க இந்தியா முடிவு செய்தது.இதற்கு பதிலளித்த டிரம்ப், “மோடி எப்போதும் எனக்கு நண்பர். இந்தியா–அமெரிக்கா உறவு வலுவாக உள்ளது” என்று தெரிவித்தார்.
இதில் அடுத்த மாதம் நடைபெறும் ஆசிய–பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் (தென் கொரியாவின் ஜியாங்சு நகரில்) டிரம்ப் பங்கேற்க இருக்கிறார்.
இந்த பயணத்தின் போது, சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வெள்ளை மாளிகை தகவலின்படி, டிரம்பின் தென் கொரியா பயணத்தில் பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் அணு ஆயுத ஒத்துழைப்பு முக்கியமாக பேசப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
South Korea summit Trump and Jinping meet face to face next month