இன்று நிகழும் கங்கண சூரிய கிரகணம்.. யாருக்கு தோஷம்? - Seithipunal
Seithipunal


இன்று சூரிய கிரகணம்

வானில் தோன்றும் அரிய நிகழ்வான வளைய சூரிய கிரகணம் இன்று (ஜூன் 10ஆம் தேதி) வியாழக்கிழமை மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் நிகழும் ராகு கிரகஸ்த பகுதி சூரிய கிரகணம் நிகழப்போகிறது. இது கங்கண சூரிய கிரகணமாகும். இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது என்பதால் இங்குள்ளவர்களுக்கு தோஷம் இல்லை. எனவே, பரிகாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

கிரகணம் எங்கெங்கு தெரியும்?

கனடாவின் சில பகுதிகள்,

வடக்கு ரஷ்யா மற்றும் 

கிரீன்லாந்து ஆகிய பகுதிகளில் சூரிய கிரகணத்தை முழுமையாக பார்க்க முடியும்.

கிழக்கு அமெரிக்கா

வடக்கு அலாஸ்கா

கனடா மற்றும் கரீபியன்

ஐரோப்பா

ஆசியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் சில பகுதிகள் ஆகிய இடங்களில் உள்ளவர்கள் சூரிய கிரகணத்தைப் பகுதியாகப் பார்க்க முடியும்.

கிரகணம் நிகழும் நேரம் :

இந்திய நேரப்படி மதியம் 1.42க்கு தொடங்கி மாலை 6.41 மணி வரை நடைபெறும்.

சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. தொலைநோக்கி சூரிய கண்ணாடி மூலம் மட்டுமே பார்க்க வேண்டும்.

யாருக்கு தோஷம்?

கிரகணமானது எந்த ஊரில் தெரிகிறதோ அந்த ஊருக்கு கிரகண தோஷம் உண்டு. அந்த ஊரில் வசிக்கும் நட்சத்திரக்காரர்களுக்கும், ராசிக்காரர்களுக்கும் கிரகண தோஷம் உண்டாகும்.

சூரிய கிரகணம் ஏற்படும் நேரத்தைப் பொருத்து அந்த நேரத்தில் எந்த நட்சத்திரம் நிகழ்கிறதோ, அந்த நட்சத்திரத்தோடு, அதற்கு முன் மற்றும் பின் உள்ள நட்சத்திரங்கள், கிரகணம் நிகழும் நட்சத்திரத்திற்கான அதிபதி ஆளக்கூடிய நட்சத்திரங்கள் சற்று கவனமாக இருப்பதும், பரிகாரம் செய்வதும் நல்லது. அவர்கள் கிரகண சாந்தி செய்து கொள்ள வேண்டும். 

ஆனால், இன்று நிகழும் கங்கண சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. அதனால் கிரகண தோஷம் கிடையாது.

ஆன்லைனில் பார்க்கலாம் :

இந்தியாவில் வசிப்பவர்கள் சூரிய கிரகணத்தை நேரில் பார்க்க முடியாவிட்டாலும் ஆன்லைனில்ஃஇணையதளங்களில் பார்க்கலாம். நாசா உள்ளிட்ட பல அமைப்புகள் இணையதளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் சூரிய கிரகணத்தை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கின்றன. எனவே, சூரிய கிரகணத்தை நேரில் பார்ப்பது போல ஆன்லைனில் பார்த்து ரசிக்கலாம்.

வளைய சூரிய கிரகணம் :

சந்திரன் பூமியில் இருந்து தூரத்தில் இருக்கும்போது சூரிய கிரகணம் ஏற்பட்டால், சந்திரனின் நிழல் முழுமையாக சூரியனை மறைக்காது. சூரிய பரப்பின் உட்பக்கத்திலேயே சந்திரனின் நிழல் விழும். அப்போது சூரியனின் விளிம்பு மட்டும் வெளியே பிரகாசமாக தெரியும். இதைதான் வளைய கிரகணம் அல்லது கங்கண கிரகணம் என்கிறோம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

solar eclipse 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->