அரசியல் லாபத்திற்காக தந்தையின் பாடலை பயன்படுத்த எதிர்ப்பு; டிரம்பை கடுமையாக விமர்சித்துள்ள பாடகர் பிராங்க் சினாட்ராவின் மகள்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மறைந்த பாடகர் பிராங்க் சினாட்ரா குடும்பத்தினருக்கு இடையேயான மோதல் கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் நீடிக்கிறது. அப்போது அட்லாண்டிக் சிட்டியில் உள்ள தாஜ் மஹால் கேசினோவில் நடந்த நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட நிதி தொடர்பான பிரச்னையில், பிராங்க் சினாட்ரா டிரம்பை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

அதன் பின்னர், 2017-ஆம் ஆண்டு டிரம்பின் பதவியேற்பு விழாவிலும், 2021-ஆம் ஆண்டு அவர் பதவியிலிருந்து விடைபெற்ற போதும் பிராங்க் சினாட்ராவின் புகழ்பெற்ற 'மை வே' பாடல் இசைக்கப்பட்டதற்கு அவரது மகள் நான்சி சினாட்ரா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில், நேற்று 1969-ஆம் ஆண்டின் சூப்பர் ஹிட் பாடலான 'மை வே' பாடலை பிராங்க் சினாட்ரா பாடும் வீடியோவை டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 

இதற்கு பாடகர் பிராங்க் சினாட்ராவின், மகள் நான்சி சினாட்ரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது 'எக்ஸ்' பக்கத்தில் கண்டனம் தெரிவித்த நான்சி சினாட்ரா, 'எனது தந்தை உயிரோடு இருந்தபோது டிரம்பை வெறுத்தார். அவரது பாடலை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதை அவர் பார்த்திருந்தால் மிகுந்த மனவேதனை அடைந்திருப்பார்' என்றும் கூறியுள்ளார். 

அத்துடன், 'இப்போது முடிவு நெருங்கிவிட்டது' எனத் தொடங்கும் அந்தப் பாடலின் முதல் வரியை டிரம்ப் நினைவில் கொள்ள வேண்டும் என்று நான்சி கிண்டலாக பதிவிட்டுள்ளார். மேலும், தனது தந்தையின் புகழை டிரம்ப் தனது ஆதாயத்திற்கு பயன்படுத்துவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Singer Frank Sinatras daughter has harshly criticized Trump objecting to the use of her fathers song for political gain


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->