'எங்கிருந்தோ புதிதாக அரசியலுக்கு வந்து நாடகத்தை நடித்துக்கொண்டிருப்பவர் வேண்டுமா?'; விஜய்யை மறைமுகமாக விமர்சித்து பெரம்பூரில் பிரச்சாரம் செய்த ஸ்டாலின்..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 02 நாட்களே உள்ளன. இதில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகள் சற்றே கூடுதல் கவனம் பெற்றுள்ளன. 

இதில், பெரம்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகரை ஆதரித்து அக்கட்சியின் தலைவரையும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது  தவெக தலைவரும், பெரம்பூர் தொகுதி வேட்பாளருமான விஜய்யை மறைமுகமாக விமர்சித்து பேசியுள்ளார்.
.
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் திமுகவை நேரடியாக எதிர்த்து விஜய் களமிறங்கியுள்ளார். அதன்படி பெரம்பூரில் திமுக சார்பில் ஆர்.டி. சேகரும், திருச்சி கிழக்கில் இனிகோ இருதயராஜும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், பெரம்பூரில் திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகரை ஆதரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது;

தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் முடித்து நேற்றுதான் சென்னை வந்தேன். அதனைத் தொடர்ந்து நேற்று தென் சென்னையிலும், இன்று வட சென்னையில் உங்களைச் சந்திக்க வந்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளதோடு, உங்களோடு இருந்து உங்களுக்காக பணியாற்றுகிற, உங்கள் வீட்டு ஊழியனாக, உங்கள் தொண்டனாக, உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருந்து பணியாற்றும் ஒருவர் வேண்டுமா? அல்லது எங்கிருந்தோ புதிதாக அரசியலுக்கு வந்து நாடகத்தை நடித்துக்கொண்டிருப்பவர் வேண்டுமா? என்பதை சிந்தித்துப் பாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசியலில் நான் யாரையும் விமர்சித்தோ, தாக்கியோ பேச விரும்பவில்லை என்றும், அது எனக்கு பழக்கமும் கிடையாது. மரியாதை இல்லாமல் தரைக்குறைவாக பேசும் வழக்கம் எனக்கு கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Stalin campaigns in Perambur indirectly criticizing Vijay


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->