மத்திய குடியரசு சார்பில் இலங்கைத் தமிழர்களுக்கு 4000 புதிய வீடுகள்; பயனாளிகளிடம் ஒப்படைத்துள்ள குடியரசு துணைத் தலைவர்..! - Seithipunal
Seithipunal


இலங்கையில் தமிழர்களுக்காக இந்திய அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளை பயனாளிகளிடம் இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஒப்படைத்தார். 

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு இந்திய அரசு வீடுகளைக் கட்டித் தரும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 145 வீடுகளை கொழும்புவில் நடந்த நிகழ்ச்சியில் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று ஒப்படைத்தார். அதனபடி, மூன்றாம் கட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கு 4,000 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியதாவது; 

இலங்கைத் தமிழ் மக்களுக்கு இதுவரை 50,000 வீடுகளை இந்திய அரசு வழங்கி உள்ளது என்றும், மேலும் 10,000 வீடுகள் நான்காம் கட்ட இந்திய வீடமைப்பு திட்டத்தின் மூலம் வழங்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்திய வம்சாவளித் தமிழர்கள், இரு நாடுகளுக்கிடையே ஒரு உயிர்ப்புள்ள உறவுப்பாலமாக விளங்குகிறார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும், இந்திய அரசும், இந்திய மக்களும், இலங்கையில் வாழும் தமிழ் மக்களை எப்போதும் தங்கள் இதயத்தில் நிரந்தர இடத்தில் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

On behalf of the Central Republic the Vice President has handed over 4000 new houses to Sri Lankan Tamil beneficiaries


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->