விஜய் வெற்றி பெற முடியாது; தலித்-சிறுபான்மை ஓட்டுக்களை பிரிக்க பாஜகவால் களம் இறக்கப்பட்டவர் அவர்; திருமாவளவன் தாக்கு..! - Seithipunal
Seithipunal


தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான கோவி.செழியனை ஆதரித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் திருவிடைமருதூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். 

அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது; அனைத்து தரப்பினரிடமும் எளிமையாக பழகி மக்கள் பணியாற்றும் வேட்பாளர் கோவி.செழியன் வெற்றி பெறுவது உறுதி என்று நம்பிக்கை தெரிவித்ததோடு, சிறந்த செயல்பாட்டின் காரணமாக பட்டியலின சமூகத்தை சேர்ந்த அவருக்கு வரலாற்றில் முதன்முறையாக உயர்கல்வித்துறை அமைச்சர் பதவியை திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்து பெருமைப்படுத்தியுள்ளார் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

மீண்டும் அவர் வெற்றி பெற்று தமிழக அமைச்சரவையில் உயர்ந்த அமைச்சர் பதவியை பெறுவார் என்றும், தலித் மற்றும் சிறுபான்மை ஓட்டுக்களை பிரிப்பதற்காக பாஜகவால் களம் இறக்கப்பட்டவர் விஜய் என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் திமுக அணிக்கும், அதிமுக அணிக்கும் தான் போட்டி. விஜய் வெற்றி பெற முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். அவரால் ஆட்சியில் அமர முடியாது என்றும், எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்த அதிமுக தற்போது இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள அதிமுக மோடி, அமித்ஷாவின் அதிமுகவாக மாறிவிட்டது என்று விமர்சித்துள்ளதோடு, இரட்டை இலைக்கு போடும் ஓட்டு மோடிக்கு போடும் ஓட்டு என்று பேசியுள்ளார். 

தொடர்ந்து திட்டக்குடியில், திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் சி.வி.கணேசனை ஆதரித்து பேசுகையில் கூறியதாவது;

எடப்பாடி பழனிசாமி பாஜகவை தனது தோள்களில் சுமந்து வருகிறார். அதிமுகவுக்கு இன்றைக்கு உண்மையான பொதுச்செயலாளர் நரேந்திர மோடிதான். பாஜகவின் இன்னொரு சங் பரிவார் அமைப்பாக மாறிவிட்டது. அன்புமணி தலைமையிலான உடைந்த பாமகவும், டிடிவி தினகரன் கட்சியின் நிலையும் அதேதான் என்று அதிமுகவை விமர்சித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thirumavalavan attacks alleging that Vijay has been fielded by the BJP to split Dalit and minority votes


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->