அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட ஸ்ரீ ஏர்லைன்ஸ் விமானம் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள தனி நாடு நேபாளம். இங்குள்ள காத்மாண் நகரில் இருந்து ஸ்ரீ ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று பைரஹவா நோக்கி புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தில் விமான பணியாளர்கள் உள்பட மொத்தம் 78 பேர் பயணம் செய்தனர். 

இந்த நிலையில், இந்த விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் விமான என்ஜினில் இருந்து தீ வருவதற்கான அறிகுறி காணப்பட்டது. இதையறிந்த விமானி சம்பவம் குறித்து தரைக்கட்டுப்பாட்டு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். 

இதையடுத்து இந்த விமானம் உடனடியாக காத்மாண்டு விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டு, அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதன் பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். 

இதைத்தொடர்ந்து, விமானம் தரையிறங்கியபோது என்ஜினில் தீப்பிடித்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. மேலும், பயணிகள் அனைவரும் வேறொரு விமானத்தின் மூலம் பயணம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

shree airlines flight emergency landing in kathmandu airport


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->