இரண்டாவது எம்மி விருது பெரும் அமெரிக்க ஜனாதிபதி..! - Seithipunal
Seithipunal


'ஹையர் கிரவுண்ட்' என்கிற பெயரில் இணைய தொடர் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவும், அவரது மனைவி மிச்செல்லும் இணைந்து நடத்தி வருகின்றனர். ஹையர் கிரவுண்ட் 'அவர் கிரேட் நேஷனல் பார்க்ஸ்' என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றை தயாரித்து வந்துள்ளது. 

இந்த ஆவணப்படத்தில், உலகம் முழுவதும் உள்ள தேசிய பூங்காக்களின் சிறப்பம்சங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன. இந்த தொடர் மொத்தம் 5 பாகங்களாக தயாரிக்கப்பட்டு  இதனை ஒபாமாவே தொகுத்து வழங்கியுள்ளார். இது கடந்த ஏப்ரல் மாதம் பிரபல ஓடிடி தளத்தில் வெளியானது. 

இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற எம்மி விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த தொகுப்பாளருக்கான விருது ஒபாமாவுக்கு வழங்கப்பட்டது. எம்மி விருது பெறும் 2-வது அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 1956-ம் ஆண்டு சிறப்பு எம்மி விருதை அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிவைட் டி.எய்சன்ஹோவர் என்பவர் பெற்றார். இந்நிலையில், ஒபாமா தனது 2 ஆடியோவை தொகுத்து வழங்கியதற்காக ஏற்கனவே கிராமி விருதுகளை பெற்றார். ஒபாமாவின் மனைவி மிச்செல்லும், தனது ஆடியோ புத்தகத்தை வாசித்ததற்காக கடந்த 2020-ல் கிராமி விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

second emmy award gave america president


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->