சீனாவில் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்; டிசம்பரில் இந்தியா வரவுள்ளார்..!
Russian President Putin to visit India in December
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வரும் டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. சீனாவில் பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது, ரஷ்ய அதிபர் புடின், இந்தியாவிற்கான வருகை குறித்து விவாதிப்பார் எனதெரிவிக்கபட்டுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா என்னை கொள்முதல் செய்ததற்காக அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப், இந்திய பொருட்களுக்கான இறக்குமதி 25 வீதமும், அபராதம் என 25 வீதம் என வரி விதித்துள்ளார். இதனால் ரஷ்யாவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவு வலுவடைந்து வருகிறது. இந்நிலையில், சீனாவின் தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டின் போது, ரஷ்ய அதிபர் புடின் திங்கள்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்.

குறித்த சந்திப்பின் போது, ரஷ்ய அதிபர் புடின், இந்தியாவிற்கான வருகை குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புடின் டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு வரவுள்ளதாக கிரெம்ளின் வெளியுறவுக் கொள்கை உதவியாளர் யூரி உஷாகோவ் தெரிவித்துள்ளார்.
இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா அதிக வரிகளை விதித்துள்ள நிலையில், புடின் இந்தியா வரவுள்ளமை. மற்றும் அப்போது முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளமை குறித்த செய்திகளால், புடினின் இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
English Summary
Russian President Putin to visit India in December