ஆசியாவின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது ஆப்கானிஸ்தான் - அதிபர் புதின் - Seithipunal
Seithipunal


ஆசியாவின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக ஆப்கானிஸ்தான் உள்ளது என்று ரஷ்ய அர்திபர் புதின் தெரிவித்துள்ளார்.

ஆசியாவின் தொடர்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கையை அதிகரிப்பது தொடர்பான நடவடிக்கைகள் குறித்த 6-வது உச்சி மாநாடு, கஜகஸ்தான் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ் தலைமையில் தலைநகர் அஸ்தானாவில் தொடங்கியது.

இந்த மாநாட்டில் அஜர்பைஜான், ஈராக், ஈரான், கத்தார், கிர்கிஸ்தான், பாலஸ்தீனம், ரஷ்யா, தஜிகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றன.

இந்நிலையில் மாநாட்டில் உரையாடிய ரஷ்ய அதிபர் புதின், ஆசியாவின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக ஆப்கானிஸ்தான் திகழ்கிறது என்றும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் ஆப்கானிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்புடன் இணைந்து நாட்டின் நிலைமையை சீராக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட அனைத்து ஆசிய நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், 20 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்கப் படைகள் வெளியேறிய பிறகு இன்னும் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று அதிபர் புடின் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russian president Putin says Afghanistan is Asia biggest security challenge


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->