நேட்டோ ரஷ்ய எல்லையில் அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் கடும் விளைவை சந்திக்க நேரிடும்! ரஷ்யா எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவிற்கு உக்ரைனுக்கும் இடையேயான போர் இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு உக்ரைன் நேட்டோ அமைப்புடன் இணைய விரும்பியது காரணமாக கருதப்படுகிறது.

இந்நிலையில் ரஷ்யாவின் அண்டை நாடான பின்லாந்து நேட்டோ அமைப்புடன் இணைய விண்ணப்பித்துள்ளதால் அந்நாட்டிற்கு மின்சார விநியோகத்தை முற்றிலுமாக நிறுத்த ரஷ்யா முடிவு செய்துள்ளது

இதனையடுத்து பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் நேட்டோ அமைப்பில் ஓரிரு வாரங்களில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு நாடுகளும் ரஷ்யா மூலம் தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று நேட்டோ அமைப்பிடம் ஓர் ஆண்டுக்கு தங்களுக்கு பாதுகாப்பு வழங்கும்படி கோரிக்கை வைத்துள்ளன.

இதனையடுத்து ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலெக்சாண்டர் குருஷ்கோ, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகளுடன் எந்த பிரச்சனையும் இல்லை.

மேலும் நேட்டோ அமைப்பு பாதுகாப்புக்காக ரஷ்ய எல்லையில் அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்போம். அது மிகுந்த கடும் விளைவை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Russia warns NATO over use of nuclear weapons


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->