மூன்று நாள் தற்காலிக போர் நிறுத்தம் - ரஷிய அதிபர் புதின் அறிவிப்பு!
Russia Ukraine War Stopped in 3 days
இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனும் அதன் கூட்டாளிகளும் வென்றதின் 80வது ஆண்டு நினைவாக, உக்ரைனுடனான போரில் மூன்று நாள் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷிய அதிபர் புதின் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
இது, கடந்த 4 ஆண்டுகளாக நீடித்து வரும் உக்ரைன் போரில், ரஷியா அறிவிக்கும் இரண்டாவது தற்காலிக போர் நிறுத்தமாகும். கடந்த மாதம் ஈஸ்டர் பண்டிகையையொட்டி முதன் முறையாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது.
மே 8 முதல் மே 10 வரை 72 மணி நேரம் இந்த போர் நிறுத்தம் அமலாகும் என கிரெம்லின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், உக்ரைன் இந்த முன்மொழிவை ஏற்க வேண்டும் என்றும், ஏற்கவில்லை என்றால் ரஷிய படைகள் தேவையான பதிலடி நடவடிக்கைகள் மேற்கொள்வது உறுதி என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், மே 9 அன்று நடைபெற உள்ள 'வெற்றி தின' அணிவகுப்பு நிகழ்வில் பங்கேற்க பிரதமர் மோடியுடன் உலகத் தலைவர்கள் பலருக்கும் ரஷியா அழைப்பு அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Russia Ukraine War Stopped in 3 days