ரஷ்யா-உக்ரைன் போர்: ரஷ்யாவில் 850 உணவகங்களை மூடிய பிரபல நிறுவனம்.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் ரஷ்யாவில் உள்ள 850 உணவகங்களை தற்காலிகமாக மூடுவதாக மெக்டோனல்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி வருகிறது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைகள் உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ரஷ்யா மீது பொருளாதார தடையையும் விதித்துள்ளன.

அதனைத்தொடர்ந்து பிரபல மென்பொருள் உற்பத்தி நிறுவனங்களான இன்டல், எச்பி, ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் பொருட்கள் விற்பனையை ரஷ்யாவில் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இதில், டிக் டாக் மற்றும் நெட்பிளிக்ஸ் ரஷ்யாவில் தங்களது சேவையை நிறுத்திக் கொள்வதாக  அறிவித்திருந்த நிலையில், நேற்று ஐபிஎம் நிறுவனம் வணிக நடவடிக்கைகளை நிறுத்துவதாக அறிவித்தது.

இந்நிலையில், ரஷியாவில் உள்ள 850 உணவகங்களையும் மெக்டொனால்டு நிறுவனம் தற்காலிகமாக மூடுகிறோம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த உணவகங்களில் 62,000 பேர் பணிபுரியும் நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia Ukraine war 850 MacDonald restaurants closed in Russia


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->