உக்ரைனில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 10 விமானங்களை தாக்கி அழித்த ரஷ்ய ஏவுகணை.! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான போர் நூறு நாட்கள் நிறைவடைந்த நிலையில் ரஷ்யா தனது தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தி வருகிறது .

இந்நிலையில் உக்ரைன் நாட்டின் கார்கீவ் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான விமான நிலையத்தில் ரஷ்யப் படைகள் ஏவுகணைகளை கொண்டு வான்வழி தாக்குதல் நடத்தின.

இதனையடுத்து ரஷ்ய ஏவுகணை தாக்கியதில் 10 விமானங்கள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ள நிலையில் விமான நிலையத்தின் மேற்கூரை மற்றும் பெரிய பயணிகள் விமானம் ஒன்று முழுவதுமாக தீயில் கருகி உள்ளது.

மேலும் விளையாட்டு மற்றும் சுற்றுலா பயணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த தனி விமானங்களும் தீயில் எரிந்து நாசமாயின.

இந்த தாக்குதலால் உயிரிழப்பு எதுவுமில்லை எனவும், சுக்குநூறாக உடைந்து மற்றும் எரிந்த விமானங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றன என்று உக்ரைன் அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia missile attacks on private planes in Ukraine


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->