கரோனாவில் இருந்து ரஷியா தப்பித்தது எப்படி?...!! - Seithipunal
Seithipunal


இந்த உலகமே கரோனாவின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் பெரும் துயருக்கு உள்ளாகியுள்ள நிலையில், மிகக்குறைவான பாதிப்பிற்கு உள்ளான நாடுகளில் முதல் நாடக ஐக்கிய அரபு அமீரகமும், இரண்டாவது இடத்தில் ரஷியாவும் உள்ளது. ரஷியா எப்படி இதன் தாக்கத்தில் இருந்து தப்பித்தது என்பது தொடர்பான சில தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

ரஷியாவின் மக்கள் தொகை 14 கோடி 67 இலட்சம் ஆகும். சீன நாட்டின் மிகநீண்ட எல்லையான சுமார் 4,209.3 கிமீ எல்லைப்பரப்பை கொண்டுள்ளது. மேலும், உலகிலேயே நீண்ட 6 ஆவது எல்லை இதுவேயாகும். ரஷிய நாட்டில் 9 நேர மண்டலம் செயல்பாடுகளில் உள்ளது. இங்குள்ள 9 இடங்களில் 9 விதமான நேரம் செயல்பாட்டில் இருக்கிறது. 

ரஷிய நாட்டில் தற்போது வரை ஒன்றரை இலட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், 253 பேருக்கு கரோனா அறிகுறி இருந்துள்ளது. தினமும் உலகளவில் ஆயிரக்கணக்கான பலி எண்ணிக்கை உயரும் நிலையில், இத்தாலி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளை ரஷியாவுடன் ஒப்பிட்டாலும் கூட ரஷியா நாட்டில் கொரோனாவின் தாக்கம் குறைந்தளவே உள்ளது.

சீன நாட்டில் கரோனா பரவிய செய்தியை அறிந்த ரஷிய பிரதமர் மிக்கேல் மிசுஸ்டின், கடந்த ஜனவரி 30 ஆம் தேதி சீன - ரஷிய எல்லையை மூட உத்தரவிட்டார். மேலும், ஜனவரி 30 ஆம் தேதியின் படி கரோனா 15 நாடுகளுக்கு மட்டுமே பரவியிருந்தது. எல்லையை மூடிவிட்டு, தனிமைப்படுத்தப்பட்ட மண்டலத்தை ரஷிய நாடு அப்படியே உருவாக்கும் பணியை துவக்கியது. 

ரஷிய மக்கள் தலைமுறை தலைமுறையாக பழைமையான நபர்கள், போர், பஞ்சம் மற்றும் அரசியல் நிலைத்தன்மை இல்லாததது போன்ற காரணத்தால் அவர்களின் மரபணுவில் இயற்கையாகவே நோயெதிர்ப்பு சக்தி அதிகளவு இருந்துள்ளது. இதனைப்போன்று போது நிகழ்ச்சிகளுக்கு துவக்கத்திலேயே தடை விதிக்கப்பட்டு இருந்தது. பொதுமக்கள் கூடவும் தடை விதித்து, பள்ளிகள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டது. 

ரஷியாவின் சோவியத் விளாடிமிர் லெனின் நினைவகம் மற்றும் மஸ்கொ சென்செதுக்கம் மூடப்பட்டது. இதனால் கரோனா பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. மேலும், ரஷிய நாட்டில் கரோனா வைரஸ் பரிசோதனைக்கு ஆய்வகமே உள்ளது. ரஷிய அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பான திட்டமிடல் வாக்கெடுப்பு அனைத்தும் தள்ளிவைத்து அறிவிக்கப்பட்டது. மேலும், நாட்டு மக்களின் நலனே நமக்கு முக்கியம் என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்தார்.

இதனைப்போன்று கடந்த மார்ச் 18 ஆம் தேதியன்று தொலைக்காட்சியில் பேட்டியளித்த புதின், கரோனாவை கட்டுக்குள் வைத்துள்ளோம் என்றும், இதற்காக கடவுளுக்கு நன்றி தெரிய்வத்துக்கொள்வதாகவும், எதிர்காலத்திலும் இது தொடரும் என்று தெரிவித்தார். மேலும், துவக்கத்திலேயே கரோனா வைரஸ் தாக்கிய நபரை கண்டறிய 3 சோதனை நடத்தப்பட்டது. 3 ஆவது பரிசோதனையிலேயே கரோனா தொடர்பான அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இரத்தத்தில் கரோனாவின் வைரஸ் தாக்கம் இல்லை என்றும், உமிழ் நீரில் கரோனா அறிகுறி இருந்ததாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே தெரிவித்திருந்தார்.

இது குறித்து உலக சுகாதார நிறுவன ரஷிய பிரதிநி தெரிவித்த சமயத்தில், கரோனா வைரஸிற்கு எதிரான கட்டுப்பாடுகள் கடந்த ஜனவரி மாதமே ரஷியாவில் துவங்கிவிட்டது என்றும், சோதனையை தாண்டி பல விதமான தொடர் நடவடிக்கையும் ரஷ்யா மேற்கொண்டது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்படி அனைத்தும் முன்னதாகவே ரசியா செய்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia how to avoid corona virus diseases


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal