உக்ரைன் அணுமின் நிலையப் பகுதியில் மின் இணைப்பை துண்டித்த ரஷ்யா.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் 8 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போர் தொடங்கியதிலிருந்தே உக்ரைனின் ஜாபோரிஜியா அணுமின் நிலையப் பகுதியை ரஷ்யா ஆக்கிரமித்தது.

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜாபோரிஜியாவை சுற்றி உக்ரைன் மற்றும் ரஷ்ய படைகள் அடிக்கடி தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் கதிர்வீச்சு கசிவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை தீவிர படுத்திய ரஷ்யா ஜாபோரிஜியா அனுமின் நிலையத்திற்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்துள்ளது. 

இதையடுத்து மின்இணைப்பின்றி, கையிருப்பிலுள்ள டீசல் மூலம் ஜெனரேட்டர்கள் உதவியுடன் 15 நாட்களுக்கு மட்டுமே அணுமின் நிலையத்தை இயக்க முடியும் என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ரஷ்யா  கட்டுப்பாட்டிலுள்ள ஜாபோரிஜியா அணு மின் நிலையத்தை உக்ரைன் பணியாளர்கள் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia disconnecting power in ukraine atomic powerplant


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->