'இந்தியா இறையாண்மை நாடு; வர்த்தகத்தில் பலன் கிடைக்கும் இடங்களில் வர்த்தகம் செய்யவும், கச்சா எண்ணெய் வாங்கவும் உரிமை உண்டு': ரஷ்யா கருத்து..! - Seithipunal
Seithipunal


உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதாகக் கூறி இந்தியாவில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அரசு அதிக வரி விதித்துள்ளது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஷ்ய அதிபர் புடின் இரண்டு நாள் பயணமாக இந்தியா விஜயம் செய்தார். அப்போது இரு நாடுகளுக்குமிடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

இந்நிலையில் ரஷ்ய அதிபர் வசிக்கும் கிரெம்ளின் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது: 

இந்தியா இறையாண்மை நாடாக இருக்கிறதாகவும், அப்படியே நீடிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளதோடு, வர்த்தக தனக்கு பலன் கிடைக்கும் இடங்களில் வர்த்தகம் செய்யவும், கச்சா எண்ணெய் வாங்கவும், இந்தியாவுக்கு உரிமை உண்டு என்றும் அறிவித்துள்ளார்.

அத்துடன், ரஷ்யாவுக்கு நம்பகமான எரிசக்தி கூட்டாளியாக ரஷ்யா நீடிக்கும் என பிரதமர் மோடியிடம் அதிபர் புடின் கூறியுள்ளார். மேலும், தங்களது பொருளாதார நலனுக்காக, இதனை இந்தியா இந்த பாதையை தொடர்ந்து பின்பற்றும் என நம்புவதாகவும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Russia believes that India has the right to trade and buy crude oil wherever it can benefit from trade


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->