உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யா மற்றும் அமெரிக்க அமைச்சர்கள் திடீர் பேச்சு.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் 8 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் மீது ரஷ்ய படைகள் இரண்டாம் கட்ட தாக்குதலை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் ரஷ்ய ராணுவ அமைச்சர் செர்ஜி ஷோய்கு தொலைபேசி வாயிலாக, அமெரிக்க ராணுவ அமைச்சர் லாயிட் ஆஸ்டினுடன் தொடர்பு கொண்டு உக்ரைன் விவகாரம் குறித்து பேசினார். மே-13ம் தேதிக்கு பின்னர் இருநாட்டு அமைச்சர்களும் பேசிக் கொள்வது இதுவே முதல் முறையாகும்.

இதையடுத்து இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக அமெரிக்கா ராணுவ தலைமையகம் பென்டகனின் ஊடக செயலாளர் பேட் ரைடர் செய்தியாளரிடம் பேட்டியளித்தார்.

அதில் அமெரிக்க அமைச்சர் லாயிட் ஆஸ்டின், ரஷிய அமைச்சர் செர்ஜி ஷோய்குவுடன் பேசுவதற்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார் எனவும், இரு நாடுகளுக்கு இடையே தகவல் தொடர்புக்கான வழிகளை திறந்து வைப்பதில் அமெரிக்கா ஆர்வமாக உள்ளது என்று தெரிவித்தார். மேலும் உக்ரைன் போர் நிலவரம் உள்ளிட்ட சர்வதேச பாதுகாப்பு தொடர்பான கேள்விகள் பற்றி விவாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia and US Ministers Hold Talks on Ukraine War


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->