முடிவிற்கு வரப்போகும் உக்ரைன் மற்றும் ரஷ்ய போர்.? - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் 19 நாளாக தொடர்ந்து வருகிறது. போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியா தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்த நிலையில், இரு நாடுகள் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான முயற்சிகளை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. 

இலையில், உக்ரைன் - ரஷ்யா சமாதானப் பேச்சுவார்த்தையில் உத்தேச அமைதி ஒப்பந்தம் தயார் என தகவல் வெளியாகி உள்ளது. இரு நாட்டினிடையே எந்நேரமும் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேட்டோவில் சேரும் முடிவை கைவிடுவதோடு ராணுவத்தை பலப்படுத்துவதையும் உக்ரைன் நிறுத்த வேண்டும். உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் ஆகியவை ஒப்பந்தத்தில் இடம் பெரும் என கூறப்படுகிறது.

ரஷ்ய துருப்புக்களை திரும்பப் பெறுதல் உள்ளிட்டவை குறித்த அமைதி ஒப்பந்தம் தயார் என தகவல் வெளியாகியுள்ளது. அமைதி உடன்பாடு ஒப்பந்தம் மூலம் உக்ரைனில் பதட்டம் தணியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

russia and ukraine war may be stop


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->