செல் என்ற சொல்லை முதலில் உருவாக்கிய ராபர்ட் ஹூக் பிறந்த தினம்.!!
Robert Hooke Birthday 2022
ராபர்ட் ஹூக் :
செல் என்ற சொல்லை முதலில் உருவாக்கிய ராபர்ட் ஹூக் 1635ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார்.
இவர் தாவரத் திசுக்களின் நுண்ணமைப்பு பற்றிய விரிவான விளக்கங்களை தந்துள்ளார். மேலும் பல வானியல் கருவிகள், கைக்கடிகாரங்கள், சுவர்க்கடிகாரங்கள் ஆகியவற்றை மேம்படுத்தியுள்ளார்.

முதன்முதலாக, கோள்களின் இயக்கங்கள் குறித்த கோட்பாடுகளை எந்திரவியல் அடிப்படையில் அணுகி அண்ட ஈர்ப்பு விசையின் இருப்பைக் கணித்தார். 1684ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்த வல்ல தந்தி முறை ஒன்றை உருவாக்கினார்.
மேலும், இவர் முதல் கணித கருவியையும், தொலைநோக்கியையும் வடிவமைத்துள்ளார். ஹூக் விதியை வரையறுத்துள்ளார். இன்றளவும் மிகச்சிறந்த எந்திரவியலாளராகக் கருதப்படும் இவர் 1703ஆம் ஆண்டு மறைந்தார்.
English Summary
Robert Hooke Birthday 2022