'காலநிலை மாற்றம் குறித்து விரைவாக செயல்பட வேண்டிய நேரம் இது' - பிரதமர் ரிஷி சுனக் - Seithipunal
Seithipunal


ஐநாவின் 27வது பருவநிலை மாற்ற மாநாடு எகிப்தில் ஷா்ம்-அல்-ஷேக் நகரில் சிறப்பு ஏற்பாடுகளுடன் நேற்று முன்தினம் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த மாநாடு, நவ.18-ஆம் தேதி வரை எகிப்தில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் அமெரிக்கா அதிபர் ஜோபைடன் மற்றும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உட்பட 120 உலக தலைவர்கள் பங்கேற்று பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான தங்களின் பரிந்துரைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பகிர்ந்துகொள்ள உள்ளனர். 

மேலும் உலக அளவில் அதிகரித்து வரும் வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்த மாநாட்டில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்றைய மாநாட்டில் பங்கேற்று பேசிய இங்கிலாந்து பிரதமர் ரிஷிக் சுனக், காலநிலை மாற்றம் குறித்து விரைவாக செயல்பட வேண்டிய நேரம் இது என்று தெரிவித்தார். மேலும் காலநிலை நிதியத்திற்கு 11.6 பில்லியன் பவுண்டுகளை வழங்க உறுதியளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rishi Sunak says Time To Act Faster On Climate Change


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->