விமான நிலையத்தை ஹேக் செய்து ஆபாச படம் ஒளிபரப்பு.. அதிர்ச்சியில் பயணிகள்.! - Seithipunal
Seithipunal


பிரேசிலில் விமான நிலையத்தில் உள்ள தகவல் திரையில் ஆபாச படம் ஒளிபரப்பானதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பிரேசில் நாட்டின் மிகப் பெரிய கடற்கரை நகரமான ரியோ டி ஜெனிரோ நகரில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையம் நேற்று முன்தினம் வழக்கம் போல் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.

அப்போது விமான நிலையத்தில் விமானங்கள் வருகை குறித்த தகவல்களை அறிவிக்கும் திரையில் திடீரென ஆபாச படங்கள் ஓட தொடங்கின. இதனால் பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதில் சில பயணிகள் ஆபாச படங்கள் ஓடிய திரையை பார்த்து சிரித்தபடி நகர்ந்து சென்றாலும், பெரும்பாலானோரை இது முகம் சுளிக்க வைத்தது. பலர் தங்கள் கண்களை மூடிக் கொண்டனர். மேலும் தங்கள் குழந்தைகள் திரையை பார்க்க விடாமல் மறைத்துக் கொண்டனர்.

தற்போதைய இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. மேலும் ஹேக்கர்கள் விமான நிலையத்தின் கம்ப்யூட்டர்களை ஹேக் செய்து விளம்பரத்துறையில் ஆபாச படங்களை ஒளிபரப்பி இருக்கலாம் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rio de Janeiro Airport hacked and porn broadcast


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->