பரஸ்பர வரி அறிவிப்பு; ட்ரம்பின் அதிரடியால், பீதியில் உலக நாடுகள்..!
Reciprocal tax announcement
''அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு, பதிலுக்கு வரி விதிக்கப் போகிறேன்,'' என்று அந்நாட்டின் அதிபர் டிரம்ப் அதிரடியாக கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது, ட்ரம்ப் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதாக குற்றம்சாட்டி வந்தார். குறிப்பாக இந்தியா, சீனா உள்ளி்ட நாடுகள் மீது புகார் அளித்தார்.

அத்துடன், அமெரிக்க அதிபரான பிறகு, மெக்சிகோ மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்து உத்தரவிட்டு உள்ளார். இதற்கு எதிராக அந்நாடுகள் பதிலடி கொடுத்துள்ளன.
இந்நிலையில், டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: மூன்று சிறந்த வாரங்கள். ஆனால், இதுவரை இல்லாத சிறந்ததாக இருக்கலாம். ஆனால், இன்று தான் பெரியது. பரஸ்பர வரி. அமெரிக்காவை சிறந்தது ஆக்குவோம். என்று அதில் கூறியுள்ளார். இதனால் உலக நாடிகள் பீதியில் உள்ளன.
English Summary
Reciprocal tax announcement