ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள் தப்பியோடும் காட்சி வெளியீடு.! - Seithipunal
Seithipunal


இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நீடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பத்தினர் எடுத்த தவறான முடிவுகளை காரணம் என எதிர்க் கட்சிகளும், பொதுமக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலக கோரி ஒரு மாதமாக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டங்களின் எதிரொலியாக பிரதமர் பதவியில் இருந்து விலக முடிவு செய்த மகிந்த ராஜபக்சே நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். 

அரசுக்கு எதிராக அமைதியான முறையில் நடைபெற்று வந்த போராட்டத்தின் மகிந்த ராஜபக்சே வன்முறையை தூண்டியதாக இலங்கை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. வன்முறையை கட்டவிழ்த்து விட்டதற்காக ராஜபக்சே கைது செய்யப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச விலகிய நிலையில், அவரது மகன் யோசிதா வெளிநாட்டுக்கு தப்பியோடினர்.

இந்நிலையில், நமல் ராஜபக்சேவின் மனைவி தப்பி ஓடும் காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் திருமலையில் உள்ள படை முகாமில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் வெளிநாடு தப்பிச் செல்ல மகிந்த ராஜபக்சவும் திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

rajapaksa family flees abroad


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->