எலிசபெத் ராணி இறுதிச்சடங்கு.. செப் 19ம் தேதி பொதுவிடுமுறை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து மகாராணி ஸ்கார்ட்லாந்தில் உள்ள பால்மாரல் அரண்மனையில் தங்கி இருந்தபோது திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 

96 வயது வரை வாழ்ந்த ராணி எலிசபெத் தனது வாழ்நாளில் 70 ஆண்டுகாலம் ராணி பட்டம் பெற்று ஆட்சி நடத்தியுள்ளார்.1952 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராணியாக அறிவிக்கப்பட்ட இவர் ஓராண்டு காலம் வரை அதிகாரப்பூர்வமாக பட்டம் ஏற்க வில்லை.

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், பிரான்ஸ் மன்னருக்கு அடுத்து ஒரு அரசை அதிக காலம் (70 ஆண்டுகள்) ஆட்சி செய்தவர் என்ற பெருமையுடன் விடைபெற்றார். பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற சிறப்பை பெற்றவர் இரண்டாம் எலிசபெத். ராணி எலிசபெத் மரணம் அடைந்ததை தொடர்ந்து, அந்நாட்டு அரசராக சார்லஸ் அறிவிக்கபட்டார். 73 வயதான சார்லஸ் மறைந்த ராணி எலிசபெத்தின் மூத்த மகன் ஆவார்.

இந்த நிலையில், ராணி எலிசபெத் மறைவுக்கு இங்கிலாந்து முழுவதும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி கடைபிடிக்கப்படுகிறது. வருகிற 18-ந்தேதி இரவு 8 மணிக்கு நாடு முழுவதும் மக்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துகிறார்கள். 19-ந்தேதி எலிசபெத்தின் இறுதி சடங்கு நடக்கிறது. இதில் உலக தலைவர்கள் பங்கேற்கிறார்கள். அன்று இங்கிலாந்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Queen Elizabeth's funeral Public holiday announced on Sep 19


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->